போதைப்பொருள் தடுப்பு சட்டம் என்ன சொல்கிறது?

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான், போதை மருந்துகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போதை பொருள் தடுப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
போதைப்பொருள் தடுப்பு சட்டம் என்ன சொல்கிறது?
x
போதை  மருந்துகள் மற்றும் சைக்கோட்ராபிக் பொருட்கள் சட்டம் 1985இல் நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அமல்படுத்தப்பட்டது. கோக்கேய்ன், ஹெராயின் போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருப்பது, அல்லது தனது நண்பர்கள், சகாக்கள் அவற்றை வைத்திருப்பதை பற்றி முழுமையாக அறிந்து கொண்ட பிறகும் அவர்களுடன் சேர்ந்து இருப்பது போன்றவற்றை கடுமையான குற்றங்களாக இதன் 35ஆவது பிரிவு வகைபடுத்துகிறது.

ஆரியன் கானிடம் தடை செயப்பட்ட போதைப் பொருட்கள் எதுவும் இல்லாத போதும், அவருடன் கேளிக்கை கப்பல் பயணத்தில் கூட  இருந்த அவரின் நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட் என்பவரிடம் இருந்து 6 கிராம் சாராஸ் போதைப் பொருள் கைபற்றப்பட்டது. 5 கிராம் வரையில், சிறிய அளவில் போதைப் பொருட்கள் வைத்திருப்பதற்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதமும், 5 கிராமிற்கு அதிகமாக போதைப் பொருளை வைத்திருப்பதற்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஒரு லட்ச ரூபாய் அபராதமும் அளிக்க, போதை  மருந்துகள் மற்றும் சைக்கோட்ராபிக் பொருட்கள் சட்டம் வகை செய்கிறது.

ஆரியன் கானின் நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட்டிடம் 6 கிராம் அளவிற்கு சாரஸ் என்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளதால், இவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வருவதாக கருதப்படுகிறது. ஆனால் தனது நண்பரிடம் 6 கிராம் சாரஸ் போதைப் பொருள் இருந்தது பற்றி ஆரியன் கானுக்கு தெரியாது என்றும், இருவருக்கும் இடையே நடந்த வாட்ஸப் உரையாடல்களிலும் இதைப் பற்றிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆரியன் கானின் வழக்கறிஞரும் முன்னாள் அட்டார்னி ஜெனரலுமான முகுல் ரோஹத்கி வாதாடியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்