"பேராசையும், திமிரும் பிடித்தவர் நிதிஷ்குமார்" - முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பேராசை மற்றும் ஆணவ குணம் படைத்தவர் என முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பேராசை மற்றும் ஆணவ குணம் படைத்தவர் என முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கடுமையாக சாடியுள்ளார். பீகாரில் செய்தியாளரிடம் பேசிய அவர், உடல்நலக் குறைவால் இரு தேர்தல்களை தவறவிட்டு விட்டதாகவும், தற்போது மக்களின் பிரார்த்தனையால் தான் நலம்பெற்றுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், வரும் உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறிய லாலு பிரசாத் யாதவ், குஷேஷ்வர் அஸ்தான் மற்றும் தாராப்பூர் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளதாகவும் கூறினார். லாலு பிரசாத்தின் வருகை, பீகார் மக்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

