"100 கோடி தடுப்பூசி முக்கிய மைல் கல்" - பிரதமர் நரேந்திர மோடி கருத்து

நாட்டின் சுகாதார வசதிகளை மேம்படுத்த இரவு பகலாக மத்திய அரசு பணியாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
100 கோடி தடுப்பூசி முக்கிய மைல் கல் - பிரதமர் நரேந்திர மோடி கருத்து
x
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும், தர்சாபு ஆரோக்கிய திட்டத்தையும்  பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கொரோனாவுக்கு எதிராக 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி மிக முக்கிய மைல் கல்லை எட்டி இருப்பதாக தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் நாட்டிற்கு தேவையான சுகாதார வசதிகளை மேம்படுத்த உரிய கவனம் செலுத்தவில்லை என கூறினார்.  இன்று துவங்கப்பட்டுள்ள சுகாதார திட்டத்தின் மூலம் நாட்டின் சுகாதார வசதிகளில் புதிய ஆற்றலையும் மேம்பாட்டையும் பெற முடியும் என தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்தவும் நோயை எதிர்த்து போராடுவதற்கு சுகாதார கட்டமைப்பு திட்டம் உதவியாக இருக்கும் எனக் கூறினார். மேலும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வலிகளை மத்திய அரசு உணர்ந்துள்ளதாக தெரிவித்தவர், எனவே நாட்டின் சுகாதார வசதிகளை மேம்படுத்த இரவு பகலாக மத்திய அரசு பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்