"முல்லைப் பெரியாறில் எவ்வளவு நீர் தேக்கலாம்?"

கேரளாவில் பருவ மழையின் போது, முல்லைப் பெரியாறு அணையில் அதிகபட்ச அளவு நீரை தேக்குவது குறித்து ஓரிரு நாளில் மத்திய நீர்வள ஆணையம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறில் எவ்வளவு நீர் தேக்கலாம்?
x
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. அப்போது, கேரளாவில் மழை வெள்ளத்தால், 50 லட்சம் பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறிய மனுதாரர் தரப்பு,  முல்லைப் பெரியாறு அணையில், 139 அடி வரை நீரை தேக்கி வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியது. தற்போதுள்ள 137 அடி நீரை, நாளை வரை தொடர்ந்த தேக்கி வைக்க வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தியது. இதன்போது, 25ஆம் தேதி காலை 9 மணி நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர் இருப்பு137 புள்ளி 2 அடியாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்தது. வாதங்களை கேட்ட நீதிமன்றம், மழை வெள்ளத்தின்போது அணையில் எவ்வளவு நீரை தேக்கி வைக்கலாம் என மத்திய நீர்வள ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என கூறி, வழக்கை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்