82வது மனதின் குரல் நிகழ்ச்சி - வானொலியில் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி

பண்டிகை நாட்களில் உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி, அவர்களின் வாழ்வில் ஒளி வீசச் செய்ய வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
82வது மனதின் குரல் நிகழ்ச்சி - வானொலியில் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி
x
பண்டிகை நாட்களில் உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி, அவர்களின் வாழ்வில் ஒளி வீசச் செய்ய வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார். 82-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய பின்னர், புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருவதாகவும், தடுப்பூசி திட்டத்தின் வெற்றி, இந்தியாவின் திறனை உலகிற்கு வெளிக்காட்டுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். டிரோன்களைப் பயன்படுத்துவதில் இந்தியா முதன்மையான நாடுகளில் ஒன்றாக திகழ்வதாகவும், கொரோனா தடுப்பூசிகளை எடுத்துச் செல்வதிலும் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார். சமீபத்திய ஆய்வுகளின்படி காவல் துறையில் பெண்களின் பங்களிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக கூறிய மோடி, பெண் காவல்துறை அதிகாரிகள், லட்சக்கணக்கான பெண் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக விளங்குவதாக பேசினார். தேசிய ஒற்றுமை தினமான அக்டோபர் 31-ம் தேதி, ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டார். 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தாலாட்டு பாடல் போட்டிகள் மத்திய கலாசார அமைச்சகத்தால் நடத்தப்பட உள்ளதாக கூறிய மோடி, தாலாட்டு பாடல்களின் வாயிலாக, தேசபக்தி கருத்துகளை குழந்தைகளின் மனதில் விதைக்க முடியும் என்றும் கூறினார். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில், உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி, அவர்களின் வாழ்வில் ஒளி வீசச் செய்ய வேண்டும் என்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். 











Next Story

மேலும் செய்திகள்