கெஸ்ட்ஹவுஸில் இருந்து 28 கேமராக்கள் மீட்பு - போலீசார் தீவிர விசாரணை

கேரளா மாநிலத்தில் நிதி மோசடி வழக்கில் கைதான மோசான் மாவுங்கலின், கெஸ்ட் ஹவுஸ் படுக்கையறை மற்றும் மசாஜ் அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டுளளது.
கெஸ்ட்ஹவுஸில் இருந்து 28 கேமராக்கள் மீட்பு - போலீசார் தீவிர விசாரணை
x
கேரளா மாநிலத்தில் நிதி மோசடி வழக்கில் கைதான  மோசான் மாவுங்கலின், கெஸ்ட் ஹவுஸ் படுக்கையறை மற்றும் மசாஜ் அறையில்  பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டுளளது. கேரள மாநிலம் கொச்சி கலூரில் பழங்கால அரிய வகை புராதான பொருட்கள் விற்பனை செய்யும் அருங்காட்சியகம் ஒன்றை மோன்சன் மாவுங்கல் என்பவர் நடத்தி வந்தார். இந்த நிலையில் பலரிடம்  தொழில் செய்ய வட்டியில்லா கடன் தருவதாக கூறி  கோடிக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக  வந்த புகாரின் அடிப்படையில் மோன்சன் மாவுங்கல் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது வீட்டில் வேலை செய்து வந்த பெண் ஊழியர் தனது 17 வயது சிறுமியை மோன்சன் மாவுங்கல் பாலியல் பலாத்காரம் செய்ததாக அளித்த புகாரின் பேரில் 
இவர் மீது  போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் கெஸ்ட் ஹவுஸிலில் உள்ள படுக்கை அறை மற்றும் மசாஜ் அறையில் இருந்த  28 ரகசியகேமராக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.அதில் கைப்பற்றப்பட்ட கேமராக்கள் அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்படவுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்