"குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து தயார்" - பாரத் பயோடெக் நிறுவனம்
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து தயார் நிலையில் உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து தயார் நிலையில் உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணா தெரிவிக்கையில் குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து தயார் நிலையில் உள்ளதாகவும், அவசரகால அனுமதிக்காக மத்திய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலுக்காக தடுப்பு மருந்து காத்திருப்பதாகவும், 2 முதல் 17 வயதினருக்கு நாசி வழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து 2 ஆம் கட்ட பரிசோதனையில் நல்ல பலனை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story

