"பெட்ரோல் விலை மிக மிக குறைவு" - அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

தனிநபர் வருமானத்துடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் விலை மிக மிக குறைவு என உத்திரபிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
பெட்ரோல் விலை மிக மிக குறைவு - அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
x
 நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதுடன், எதிர்கட்சிகளும் கண்டன குரல் எழுப்பி வருகின்றன. 100 ரூபாயை கடந்து செல்லும் பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் உபேந்திரா திவாரி சர்ச்சையாக பேசியுள்ளார். ஒருசிலருக்கு மட்டுமே 4 சக்கர வாகனமும், பெட்ரோலும் தேவைப்படுவதாகவும், 95 சதவீதத்தினருக்கு பெட்ரோல் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்