சபரிமலை-ஆன்லைன் முன்பதிவு விவகாரம் - "மாநில அரசு, காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதா? கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு மேற்கொள்ள கேரள அரசுக்கும் காவல்துறைக்கும் அதிகாரம் உள்ளதா என கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சபரிமலை-ஆன்லைன் முன்பதிவு விவகாரம் - மாநில அரசு, காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதா? கேரள உயர்நீதிமன்றம் கேள்வி
x
சபரிமலைக்கு தரிசனம் செய்ய செல்வதற்காக கேரள அரசால் அமல்படுத்தப்பட்டு வரும் ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு மேற்கொள்வதற்கு கேரள அரசுக்கும் காவல்துறைக்கும் அதிகாரம் உள்ளதா என கேள்வி எழுப்பியது. கோயிலின் நிர்வாகி என்ற முறையில் தேவசம் போர்டு தான் இதுபோன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டும் எனவும், கோயில் தொடர்பான விவகாரங்களை கேரள அரசு கையாள்வதற்கு என்ன பங்கு இருக்கிறது எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தைச் செயல்படுத்த தேவசம் போர்டின் அனுமதி உள்ளதா எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விசாரணையின் போது பதில் அளித்த கேரள அரசு, கொரோனா விவகாரத்தால்  நல்லெண்ணத்துடனும் பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கவும் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு திட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தது. 2011 ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் முன்பதிவு முறை அமலில் உள்ள நிலையில் இதுவரை எந்த புகாரும் எழவில்லை எனவும், இதுவரை 80 லட்சம் பேர் ஆன்லைன் முன்பதிவு முறையில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதேபோல், கோயிலின் நிர்வாகி என்ற முறையில் தேவசம்போர்டு தான் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரம் படைத்தவர்கள் என்ற சிறப்பு ஆணையரின் அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென கேரள காவல்துறை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்