100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி இந்தியா சாதனை - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்திருக்கும் நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
x
100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்திருக்கும் நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பணியாக இருக்கும் தடுப்பூசி செலுத்துவதில், இந்தியா 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 12 கோடிக்கும் அதிகமான டோஸ் செலுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் ஊக்குவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் பொதுமக்களுக்கு பெரிதும் பயனளித்த நிலையில், அசைவம் சாப்பிடுபவர்கள் தயக்கம் காட்டியதால் தற்போது சிறப்பு முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி செலுத்துவதன் மூலம், மந்தை நோய் எதிர்ப்பாற்றல் ஏற்படும் என்பதால், இந்தியாவில் தற்போது அதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து ட்விட்டரில் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "இந்திய அறிவியலின் ஆற்றலையும், 130 மக்களுடைய கூட்டுணர்வின் வெற்றியையும் 100 கோடி டோஸ் செலுத்தப்பட்டதன் மூலம் நாம் காண்கிறோம்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்