கேரளாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கேரளாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை வரை மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
கேரளா மாநிலத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இடுக்கி, பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரை மழை நீடிக்கும் எனவும் அடுத்த நான்கு நாட்களுக்கு  மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கேரளாவை புரட்டி போடும் இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலேயில், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்