போலீஸ் காவலில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளி: குடும்பத்துடன் பிரியங்கா காந்தி சந்திப்பு

உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் போலீஸ் காவலில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
போலீஸ் காவலில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளி: குடும்பத்துடன் பிரியங்கா காந்தி சந்திப்பு
x
ஆக்ரா காவல் நிலைய குடோனில் திருடு போன பணம் தொடர்பாக அருண் குமார் என்ற துப்புரவு தொழிலாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், போலீஸ் காவலில் இருந்த துப்புரவு தொழிலாளி உயிரிழந்தார்.  அவர் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த அருண்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிரியங்கா காந்தி, அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, என்ன நடந்தது என்பது குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி, இறந்துபோன துப்புரவு தொழிலாளி அவரது மனைவி கண் முன்னே போலீசார் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், காவல் நிலையத்தில் வைத்து அவருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். முன்னதாக முதலில் லக்னோவில் வைத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி, பிறகு அருண்குமார் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்