25 வயது பெண்ணை மணமுடித்த 45 வயதான நபர் - கர்நாடகாவில் நடந்த சம்பவம்
பதிவு : அக்டோபர் 21, 2021, 01:34 PM
கர்நாடகாவை சேர்ந்த 45 வயதான நபர், 25 வயதான பெண்ணை திருமணம் செய்திருக்கும் நிலையில் இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது...
பொதுவாக காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்... ஆனால் காதலுக்கு வயதும் இல்லை.. அது தேவையும் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது இந்த சம்பவம்...

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகனா. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

இதனிடையே 2 ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டை விட்டு வெளியே சென்ற கணவன் அதன்பிறகு வீடு திரும்பவே இல்லை. கணவனை காணாமல் தவித்துப் போனார் மேகனா. காணாமல் போன கணவன் மீண்டும் வராததால் தனியாகவே வாழ்ந்து வந்தார்...

இந்த சூழலில் மேகனாவுக்கு சிக்கதனேகுப்பே என்ற கிராமத்தை சேர்ந்த 45 வயதான சங்கரண்ணா என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது....

தமிழில் வெளியான விடுகதை படத்தின் காட்சிகளை போலவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதித்தனர். மேகனாவும், சங்கரண்ணாவும் இந்த விவகாரத்தை தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூறி அனுமதியும் பெற்றனர். 

இதையடுத்து சிக்கதனக்குப்பே கிராமத்தில் உள்ள கோயிலில் வைத்து இருவருக்கும் எளிமையாக திருமணமும் நடந்தேறியது... இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்...

தொடர்புடைய செய்திகள்

கொரோனா சான்றிதழ்கள் - கர்நாடகாவில் வெடித்த புதிய சர்ச்சை

கர்நாடகாவில் இறந்தவர்களின் பெயர்களில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 views

பிற செய்திகள்

லாரி மோதியதில் பெரியார் சிலை சேதம் - விழுப்புரத்தில் நள்ளிரவில் பரபரப்பு | #ThanthiTv

விழுப்புரத்தில் கண்டெய்னர் லாரி மோதி பெரியார் சிலை சேதமடைந்த‌தால் பதற்றம் ஏற்பட்டது.

12 views

கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு.

22 views

கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

17 views

ஊராட்சி மன்ற அலுவலகம் மீது சாணம் வீச்சு - பெண் ஊராட்சி மன்ற தலைவர் ஆதங்கம்

செஞ்சி அருகே பொது சொத்துகளை சேதப்படுத்திய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண் ஊராட்சி மன்ற தலைவி புகார் அளித்துள்ளார்.

68 views

வன விலங்குகள் பலி - பசுமை தீர்ப்பாயம் அதிரடி !

மின் கம்பிகளில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதற்காக 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

40 views

சரியான நேரத்திற்கு பணிக்கு வராத அதிகாரிகள் - விளக்கம் அளிக்க அமைச்சர் உத்தரவு

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.