"2030 -க்குள் 450 ஜி.வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி" - கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் தகவல்

2030 -ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2030 -க்குள் 450 ஜி.வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி - கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் தகவல்
x
சர்வதேச சூரியசக்தி கூட்டணியின், நான்காவது பொதுக் கூட்டத்தை மத்திய அமைச்சரும், சர்வதேச சூரியமின்சக்திக் கூட்டணியின் தலைவருமான  ஆர்.கே.சிங் தொடங்கி வைத்தார். இதில் 106 நாடுகள் பங்கேற்றன. அனைத்து உறுப்பு நாடுகளையும் திரு.ஆர்.கே.சிங் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பின்பற்றும் முறை கடந்த தசாப்தத்தின் தொடக்கத்திலிருந்து வேகம் பெற்றுள்ளது என்றார். 
உலகம் முழுவதும், மின்சார அணுகல் குறைவாக உள்ள, 800 மில்லியன் மக்களுக்கு,  சர்வதேச சூரிய  மின்சக்தி கூட்டணி அமைப்பால் மின்சாரம் கிடைக்கச் செய்ய  முடியும் என்றும், அப்போது அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்