"இந்தியாவில் மரபணு மாற்ற அரிசி இல்லை" - மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி வகை எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மரபணு மாற்ற அரிசி இல்லை - மத்திய அரசு விளக்கம்
x
இந்தியாவில் இருந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டையடுத்து, உணவு பொருட்கள் திரும்பப் பெறப்படுவதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. 

இதற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் விடுத்துள்ள விளக்கத்தில் இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி வகை எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசியின் வர்த்தகத்துக்கு இந்தியாவில் தடை உள்ளது என்றும் இந்தியாவில் இருந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது என்ற கேள்விக்கே இடம் இல்லை என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.


இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பச்சரிசிக் குருனை, ஐரோப்பிய யூனியன் சென்றடைவதற்கு முன் பல பேரிடம் கைமாறியுள்ளது என்றும் 

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசி மரபணு மாற்றம் செய்யப்படாதது என்பதை ஏற்றுமதியாளர் உறுதி செய்துள்ளார் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 மரபணு மாற்றம் செய்யப்படாத அரிசியைத்தான் உலக நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது என்றும்

இந்தியாவின் புகழைக் கெடுக்க நடந்த சதியாக இது இருக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்