எல்லையில் அத்துமீறும் சீன ராணுவம் - அருணாச்சல் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்து வரும் நிலையில், அருணாச்சல பிரதேசம் எல்லையில் புது படைப்பிரிவை களமிறக்கியிருக்கும் இந்திய ராணுவம், போர்பஸ் பீரங்கிகளை குவித்துள்ளது. இது குறித்து பார்க்கலாம்...
எல்லையில் அத்துமீறும் சீன ராணுவம் - அருணாச்சல் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
x
இந்தியாவும், அண்டைய நாடான சீனாவும் 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் நீளம் கொண்ட  எல்லையை பகிர்ந்துள்ளது. இந்நிலையில் இரண்டு  நாடுகள் இடையிலான எல்லை பல இடங்களில் வரையறை செய்யப்படாத நிலையில், சீன ராணுவம் அத்துமீறி இந்திய பகுதிக்குள் வருவது  வழக்கமான 
செயலாக இருந்து வருகிறது. 

எல்லை பிரச்சினையை தீர்ப்பது குறித்து  பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ராணுவத்தின் அடாவடி சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. 

இவ்வாறு அத்துமீறி இந்திய பகுதிக்குள் வரும் சீன வீரர்களை, இந்திய ராணுவம் வெளியேற்றி வருகிறது. எல்லையில் சீனாவை சமாளிக்கும் வகையில் சாலை, விமானப்படை தளம் மற்றும் ராணுவ உட்கட்டமைப்பையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, சீன எல்லையில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 
இந்தியா அதிகரித்துள்ளது. அதிநவீன ஆயுதங்களையும் சீன எல்லையில் நிலை நிறுத்தி வருகிறது. 

இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றும் ரபேல் போர் விமானங்கள், ஆகாஷ் ஏவுகணைகள், பீரங்கிகளையும் சீன எல்லையை நோக்கி நிலை நிறுத்தியுள்ளது. போர்பஸ் பீரங்கிகளையும்,  அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட எம். 777 இலகு ரக பீரங்கிகளையும் ராணுவம் கிழக்கு எல்லையில் நிலை நிறுத்தியிருக்கிறது.

மேலும், சீனாவுக்கு பதிலடி தரும் வகையில் 6 மாதங்களுக்கு முன்பாகவே பிராந்தியத்தில் புதிய படைப்பிரிவை களமிறக்கிவிட்டோம் என அருணாச்சல பிரதேச மாநிலம் வெஸ்ட் கமெங்கில் ராணுவ கமாண்டர் நவ்னீத் சாயில் கூறியுள்ளார். எல்லையில் முதல் முறையாக வான் கண்காணிப்பு கட்டமைப்பையும் பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருப்பது சீனாவின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா தயாராகி விட்டது ஊர்ஜிதமாகிறது.


Next Story

மேலும் செய்திகள்