"தமிழர் என்பதால் அங்கீகாரம் இல்லை" - திரைப்பட இயக்குனர் கணேசன் கருத்து

உலகெங்கிலும் அங்கீகாரம் கிடைத்தாலும் தமிழர் என்பதால் கர்நாடகாவில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை திரைப்பட இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் என்பதால் அங்கீகாரம் இல்லை - திரைப்பட இயக்குனர் கணேசன் கருத்து
x
கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவை சேர்ந்தவர் கு.கணேசன். பிறப்பால் தமிழரான இவர் வளர்ந்தது முழுவதுமே  பெங்களூரில் தான். சினிமா மற்றும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இவர், சமூக அக்கறையை வெளிப்படுத்தும் பல்வேறு திரைப்படங்களை தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கிய "நம்ம மகு" என்ற குழந்தைகள் நலன் குறித்த திரைப்படம் 23 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஆனாலும் இந்தத் திரைப்படத்தை கர்நாடக அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், இத்திரைப்படத்தை  திரையிட கூட அனுமதிக்கப்படவில்லை என கணேசன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்