மோசடி வழக்கில் கைதான மோன்சன் மாவுங்கல் - நவம்பர் 3 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு

மோசடி வழக்கில் கைதான மோன்சன் மாவுங்கலை அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை ரிமாண்டில் வைக்க எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோசடி வழக்கில் கைதான மோன்சன் மாவுங்கல் - நவம்பர் 3 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு
x
மோசடி வழக்கில் கைதான மோன்சன் மாவுங்கலை அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை ரிமாண்டில் வைக்க எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சேர்த்தலாவை சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். பழங்கால பொருட்களை விற்பதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மோன்சனின் ரிமாண்ட் முடிவடைந்ததை தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மோன்சனை  அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை ரிமாண்டில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நிதி மோசடி தொடர்பாக மோன்சன் மீது ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குற்றப்பிரிவு காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். இதற்கிடையில், எர்ணாகுளம் வடக்கு போலீசால் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் வரும் நாட்களில் மோன்சன் கைது செய்யப்படலாம் என தெரிய வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்