உச்சநீதிமன்றத்தில் வாரம் 2 முறை நேரடி விசாரணை - எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் முறையீடு
பதிவு : அக்டோபர் 20, 2021, 05:53 PM
உச்சநீதிமன்றத்தில் வாரமிருமுறை நேரடி விசாரணை தொடங்குவதற்கு எதிராக மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் முறையீடு செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் வாரமிருமுறை நேரடி விசாரணை தொடங்குவதற்கு எதிராக மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் முறையீடு செய்துள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், உச்சநீதிமன்றத்தில் வாரமிருமுறை நேரடி விசாரணை தொடங்குவதால் சிக்கல் உருவாகியுள்ளது என்றார்.  இதுதொடர்பாக  நேரில் விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என முறையிட்டார். இதற்கு தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்குவது தொடர்பான கோரிக்கைக்கு செவி மடுக்கவில்லை என வழக்கறிஞர் சங்கம் தெரிவிக்கிறது என்றார். திங்கள், வெள்ளிக்கிழமை நேரடி விசாரணை இல்லை என்றும், செவ்வாய்க்கிழமையும் விருப்பத் தேர்வாக உள்ளது எனவும் குறிப்பிட்டார். இருநாட்கள் நேரடி விசாரணை நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என கேள்வி எழுப்பினார். இதற்கு கபில் சிபல், நேரடி விசாரணையை எதிர்க்கவில்லை, அதை ஏன் கட்டாயமாக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார். அப்போது தலைமை நீதிபதி, சக நீதிபதிகள் உடன் மதிய உணவு இடைவேளையின் போது விவாதித்து, இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை ஆலோசிப்போம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

470 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

104 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

45 views

பிற செய்திகள்

ஊரடங்கு காலத்தில் தொலைந்த சிறுவன் - ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தந்தையுடன் சேர்ப்பு !

ஊரடங்கு காலத்தில் தொலைந்த சிறுவன் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தந்தையுடன் சேர்ப்பு தந்தை- மகன் சந்திப்பை சாத்தியமாக்கிய ஆட்சியர்கள் "மகன் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி"- தந்தை நெகிழ்ச்சி நெல்லையில் ஊரடங்கு காலத்தில் தொலைந்து போன வடமாநில சிறுவன், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

23 views

கொரோனா 3-வது அலை - அதிக பாதிப்பு யாருக்கு? | Corona

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது 600 ஆக இருந்த தினசரி பாதிப்பு, தற்போது 20 ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. உயிரிழப்பும் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.

40 views

பிரம்ம குமாரிகளின் 7 திட்டங்கள் : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உரை

சுதந்திரத்தின் 75வது ஆண்டு பெருவிழாவில் இருந்து, 'தங்க இந்தியாவை நோக்கி' எனும் தேசிய விழாவை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

38 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (20/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (20/01/2022) | Morning Headlines | Thanthi TV

12 views

"கேரளாவில் மேலும் 54 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு"

கேரளாவில் புதிதாக 54 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

9 views

கர்நாடகாவில் மேலும் 40,499 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் ஒரே நாளில் 40 ஆயிரத்து 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.