இடுக்கி அணையில் 1 லட்சம் லிட்டர் நீர் வெளியேற்றம் - கேரள மின்துறைக்கு 10கோடி ரூபாய் இழப்பு

கேரள மாநிலம் இடுக்கி செறுதோணி அணையில் மதகுகள் திறக்கப்பட்டு நொடிக்கு 1 லட்சம் லிட்டர் நீர் வெளியேற்றப்படுவதால் நாளொன்றுக்கு 10 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இடுக்கி அணையில் 1 லட்சம் லிட்டர் நீர் வெளியேற்றம் - கேரள மின்துறைக்கு 10கோடி ரூபாய் இழப்பு
x
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 22 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அணையான இடுக்கி செறுதோணி அணை நிரம்பியதால் தண்ணீரை வெளியேற்ற  மதகுகள் திறக்கப்பட்டது. அதன்படி  வினாடிக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் மூன்று ஷட்டர்கள் மூலம் வெளியேற்றப்படுகிறது.   நீர் மட்டம் 2397 அடியை எட்டும்போது ஷட்டர்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மின் உற்பத்தி செய்யாமல் நீரை வெளியேற்றுவதால் கேரள மின்துறைக்கு நாள் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்