சீனாவில் தொடரும் மின்வெட்டு... இந்திய நிறுவனங்களுக்கு குவியும் ஆர்டர்கள்...
பதிவு : அக்டோபர் 20, 2021, 04:32 PM
சீனாவில் ஏற்பட்டுள்ள நிலக்கரி மற்றும் மின்சார பற்றாக்குறையின் விளைவாக இந்தியாவில் உள்ள எக்கு மற்றும் ரசாயன தொழிற்சாலைகளில் விற்பனை அதிகரித்துள்ளது.
சீனாவில் ஏற்பட்டுள்ள நிலக்கரி மற்றும் மின்சார பற்றாக்குறையின் விளைவாக இந்தியாவில் உள்ள எக்கு மற்றும் ரசாயன தொழிற்சாலைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. 

சீனாவின் மின்சார உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்புகளில் இருந்து உலகப் பொருளாதாரம் மீண்டெழுந்து வருவதால், உலகெங்கும் நிலக்கரிக்கான தேவை அதிகரித்து, அதன் விலை உயர்ந்துள்ளது. சீனாவில் ஏற்பட்ட மழை வெள்ளங்கள் காரணமாக நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சீனாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு, மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பல பகுதிகளில் தொடரும் மின் வெட்டுகளினால், பெரும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் எக்கு, இரும்பு மற்றும் ரசாயனங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், இவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளது. உலக அளவில் இந்த பண்டங்களின் தேவையில் கணிசமான அளவு, சீனாவில் இருந்து செய்யப்படும் ஏற்றுமதிகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

இதன் காரணமாக இந்தியாவின் எக்கு மற்றும் ரசாயனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் ஏற்றுமதிகள் அதிகரிக்க உள்ளதாக துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஆனால் இந்தியாவிலும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அனல் மின் நிலையங்களுக்கு மட்டும் தற்போது மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி அளிக்கப்படுகிறது.  அலுமினிய உற்பத்திக்கு நிலக்கரி தேவைப்படுவதால், இந்தத் துறையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தமிழகம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? | Omicron

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

608 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

182 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

87 views

பிற செய்திகள்

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

8 views

ஹெல்மெட் அணிந்து சமைக்கும் பெண்கள்...! காரணம் என்ன..?

இலங்கையில் சமையல் செய்த போதே சமையல் எரிவாயு சிலிண்டர்களும், அடுப்புகளும் வெடித்து சிதறும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

7 views

"விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்?""தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கின"

"விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்?""தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கின"

17 views

35 நாடுகளில் ஒமிக்ரான் பரவல்..

தற்போது உலகெங்கும் 35 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

40 views

"தமிழ் பாரம்பரிய மாதம்" - லண்டனில் எழுந்த கோரிக்கை

ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் என லண்டன் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

10 views

வியட்நாமில் கொட்டித் தீர்க்கும் கனமழை - 18 பேர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்

வியட்நாம் நாட்டில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளால் இதுவரை 18 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.