வங்காளதேசம் - இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் : 20 வீடுகளுக்கு தீவைப்பு - அமெரிக்கா கண்டனம்

வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, தாக்குதல்களை தடுக்கும் நடவடிக்கைகளை, அந்நாட்டு பிரதமர் தீவிரப்படுத்தி உள்ளார்.
வங்காளதேசம் - இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் : 20 வீடுகளுக்கு தீவைப்பு - அமெரிக்கா கண்டனம்
x
வங்காளதேச நாட்டில் சமீப நாட்களாகவே, அங்கு சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம், குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது, சமூக வலைதளத்தில் பரவிய வதந்தி காரணமாக வன்முறை வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, இந்துக்கள் அதிகம் வசிக்கும் பிர் காஞ்ச் உபசிலா என்ற கிராமத்தில் நடந்த தாக்குதலில் 66 வீடுகள் சேதமடைந்தன. 20 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந்தத் தொடர் தாக்குதல்களைக் கண்டித்து, கொல்கத்தாவில் இந்து அமைப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தலைமை தாங்கிய சவுரிஷ் முகர்ஜி கூறுகையில்... இந்துக்கள் மீது தொடரும் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர், மத நம்பிக்கைகளுக்கு வங்காள தேசம் மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இந்த சூழலில், மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு, வங்காளதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கானை, பிரதமர் ஷேக் ஹசீனா இன்று அறிவுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்