கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான வானிலை அறிவிப்பில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்ட இடுக்கி, ஆலப்புழா மற்றும் பத்தினம்திட்டா பகுதிகளில் மேலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், ஆற்றங்கரையோரம் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களிலும் வசிக்கக்கூடியவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. லட்சத்தீவு கடற்கரையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்