கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை - ரூ.175கோடி மதிப்பிலான விவசாய பயிர்கள் சேதம்

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழையால் 175 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை - ரூ.175கோடி மதிப்பிலான விவசாய பயிர்கள் சேதம்
x
கேரளாவை புரட்டிப்போட்ட கனமழையால் 175 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கனமழை கொட்டித்தீர்த்த கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, ஆலப்புழா மாவட்டங்களில் சுமார் 9 ஆயிரத்து 752 ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. வாழை, ரப்பர், நெல், மிளகு, ஏலக்காய் மற்றும் காய்கறி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதில் 55 ஆயிரத்து 775 விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். அதிகபட்சமாக கோட்டயத்தில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஹெக்டேரும், பாலக்கோட்டில் ஆயிரத்து 200 ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் மழை வெள்ளத்தில் அழிந்துள்ளன. இதுமட்டுமின்றி மின்மாற்றி சேதம் மற்றும் மின் இணைப்பு துண்டிப்பால்  மின்சாரத்துறை 18 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதிப்பு பகுதிகளில் சுமார் 5 லட்சம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.




Next Story

மேலும் செய்திகள்