ஹால்ட்வானி பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆற்றுப் பாலம் - பதைபதைக்கும் காட்சிகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஹால்ட்வானி பகுதியில் உள்ள ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.. அந்த காட்சிகளை பார்க்கலாம்...
ஹால்ட்வானி பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆற்றுப் பாலம் - பதைபதைக்கும் காட்சிகள்
x
உத்தரகண்ட் மாநிலத்தில் இடைவிடாது 3 நாட்களாக நீடிக்கும் மழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளபெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீர் சூழந்ததால் மக்கள் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில், கவுலா ஆற்றில் கரைப்புரண்டோடும் வெள்ளத்தால் ஹால்ட்வானியில் உள்ள பாலம் அடித்து செல்லப்பட்டது. பாலத்தை கடக்க இருசக்கர வாகனத்தில் வந்த நபரை அங்கிருந்தவர்கள் எச்சரித்ததால் அவர் உயிர் பிழைத்தார். ஓடும் நீரில் பாலம் கொஞ்சம் கொஞ்சமாக அடித்து செல்லப்படும் காட்சி வெளியாகியுள்ளது. இதேபோன்று சல்தி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாம்பவாத் பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலம் முழுவதுமாக மூழ்கியது. நைனிதல் ஏரி நிரம்பியதால் வெளியேறிய வெள்ள நீர், குடியிருப்பு பகுதிகளில் பெருக்கெடுத்த காட்சிகளும் வெளியாகி பதைபதைக்க வைத்தன.  



Next Story

மேலும் செய்திகள்