புதிய விமானநிலையம் : மத்திய அரசு திட்டம் - கேரள மாநில அரசு நிராகரிப்பு

கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்திற்கு பதிலாக புதிய விமான நிலையம் என்ற மத்திய அரசின் திட்டத்தை கேரள அரசு நிராகரித்துள்ளது.
புதிய விமானநிலையம் : மத்திய அரசு திட்டம் - கேரள மாநில அரசு நிராகரிப்பு
x
கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்தில் பொதுப்பணிதுறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகம்மது ரியாஸ் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வி.அப்துர் ரஹ்மான் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பெரிய விமானங்களுக்கு இடமளிக்கும் வகையில் கரிப்பூர் விமான நிலையத்தில் ரன்வேயை உருவாக்க 96.5 ஏக்கர் நிலம் தேவை என எடுத்து கூறப்பட்டது. விமான நிலையத்தின் விரிவான வளர்ச்சிக்கு மொத்தம் 248.75 ஏக்கர் நிலம் தேவை என்றும் கூட்டத்தில் மதிப்பிட்டப்பட்டது. மேலும்  மக்களுக்கு இடையூறு இல்லாமல் நிலம் கையகப்படுத்தும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு பிறகு, அமைச்சர் வி.அப்துல் ரஹ்மான்  பத்திரிக்கையாளர் சந்திப்பில் கரிப்பூர் விமான நிலையத்தில்  பெரிய விமானங்கள் தரையிறக்க எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்