வரதட்சணையாக அளித்த நிலத்தை விற்க முயற்சி - தடுக்க முயன்ற மாமனார், மாமியாருக்கு அரிவாள் வெட்டு
பதிவு : அக்டோபர் 18, 2021, 06:26 PM
வரதட்சணையாக கொடுத்த நிலத்தை விற்பதை தடுக்க முயன்ற மாமனார், மாமியார், மனைவி, மற்றும் மனைவியின் தங்கையை அரிவாளால் மருமகன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணையாக கொடுத்த நிலத்தை விற்பதை தடுக்க முயன்ற மாமனார், மாமியார், மனைவி, மற்றும் மனைவியின் தங்கையை அரிவாளால் மருமகன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மயிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்பாபு, தனலட்சுமி தம்பதியினருக்கு, திருமணம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் குழந்தைகள் இல்லை. இதனால், கணவர் ராம்பாபு மதுபோதைக்கு அடிமையானார். பின்னர், வேலைக்கு செல்லாமல், மனைவிக்கு வரதட்சணையாக கொடுத்த நிலத்தை விற்க, ராம்பாபு முயன்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி, மாமனார், மாமியார், மனைவியின் தங்கை ஆகியோரை அரிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளார். காயமடைந்த மாமனார், மாமியார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த  மயிலாபுரம் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

571 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

108 views

பிற செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

8 views

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது .

10 views

கூடங்குளம் அணுகழிவுகள் - மத்திய அரசு விளக்கம்

கூடங்குளம் அணுகழிவுகள் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அணுமின் நிலைய வளாகத்துக்கு உள்ளே, சேமித்து வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

7 views

"ஊட்டியில் ஃபிலிம் சிட்டி அமைக்க வேண்டும்" | Film City | Ooty

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், பிலிம்சிட்டி அமைக்க வேண்டும் என, மத்திய அரசு திமுக எம்.பி. ஆ.ராசா கோரிக்கை வைத்துள்ளார்.

12 views

கமர்ஷியல் சிலிண்டர் விலை உயர்வு

வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை 101 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து இரண்டாயிரத்து 234 ரூபாய் 50 காசுகளாக உள்ளது.

10 views

சபரிமலையில் கூடுதல் தளர்வுகள்கேரள அரசு அனுமதிக்குமா?

ஐயப்பன் கோயிலில் கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி முதல்வர் பினராயி விஜயனுக்கு தேவஸம்போர்டு கடிதம் எழுதியுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.