தின்பண்டம் விஷமாக மாறிய அவலம்: பரிதாபமாய் உயிரிழந்த 3 பிஞ்சுகள் - போலீஸ் விசாரணை

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் கடையில் மாவினால் செய்யப்பட்ட திண்பண்டம் வாங்கி சாப்பிட்ட 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தின்பண்டம் விஷமாக மாறிய அவலம்: பரிதாபமாய் உயிரிழந்த 3 பிஞ்சுகள் - போலீஸ் விசாரணை
x
உஞ்சஹார் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் குமார்...இவருக்கு முத்து முத்தாய் 3 பெண் பிள்ளைகள்...மூத்த மகள் வைஷ்ணவிக்கு 8 வயது...2வது மகள் விதிக்கு 6 வயது...கடைக் குட்டியான பிஹுவிற்கு 4 வயது...

தசராவுக்காக ஊருக்கு வந்திருந்த நவீன் குமார், தன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் தன் பிள்ளைகளுக்காக ஜமுனாபூர் சந்தையில் இருந்து கை நிறைய திண்பண்டங்களை வாங்கி வந்திருந்தார்...

அவர் வீட்டுக்கு வந்தவுடன், ஆசை ஆசையாய் திண்பண்டங்களைப் பிரித்து 3 குழந்தைகளும் உண்ணத் தொடங்கினர்...

சிறிது நேரம் எல்லாம் இயல்பாகத் தான் சென்று கொண்டிருந்தது...பேசி சிரித்து மகிழ்ச்சியாய் விளையாடிக் கொன்டிருந்த குழந்தைகள் திடீரென்று வாந்தி எடுக்கத் துவங்கினர்...கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டனர்...

தண்ணீர் குடித்தால் சரியாகி விடும் என்று நினைத்த பெற்றோர், குடிக்கத் தண்ணீர் கொடுத்த போதும் எதுவும் சரியாகவில்லை...

நேரம் ஆக ஆக நிலைமை மோசமாகவே, விபரீதத்தை உணர்ந்த குடும்பத்தினர் 3 குழந்தைகளையும் அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர்...

மருத்துவமனையில் கொண்டு சேர்த்த போது, முதல் பிள்ளையான வைஷ்ணவி பரிதாபமாக உயிரிழந்தார்...

அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், மீதி 2 குழந்தைகளுக்கும் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்...

அங்கு 3வது குழந்தை பிஹு அடுத்து பலியானார்...

இறுதியாக விதி மட்டுமே சிகிச்சை பெற்று வந்தார்...

செய்வதறியாது தவித்து நின்ற குடும்பத்தினர், இறந்த 2 குழந்தைகளின் உடல்களையும் எடுத்துக் கொண்டு புதைக்க புறப்பட்டனர்...

ஆனால், அதற்குள்ளாகவே, குழந்தை விதியின் வாழ்விலும் "விதி" விளையாடி விட்டது...சிகிச்சை பலனின்றி அவரும் மரணமடைந்தார்...

3 குழந்தைகளையும் பறி கொடுத்து விட்டு குடும்பத்தினரும் உறவினர்களும் புலம்பித் தவித்தனர்...

திண்பண்டம் உண்ட குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது...

இது அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லவே உடனடியாக அவர்கள் களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்...

அதன் படி, புதைக்கப்பட்ட 2 சிறுமிகளின் உடல்களையும் தோண்டி எடுத்த அதிகாரிகள் அவற்றை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்...

இச்சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது...

கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்கள் விஷமாகி உயிரைக் கொல்லும் சம்பவங்கள் சமீபமாக அதிகரித்திருப்பது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்