கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழை: மேகவெடிப்பு காரணமில்லை என விளக்கம்
பதிவு : அக்டோபர் 18, 2021, 11:47 AM
கேரளாவில் கனமழை கொட்டித்தீர்த்து அழிவை ஏற்படுத்தியதற்கு மேக வெடிப்பு காரணமில்லை என்று தேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்த கனமழையால் இடுக்கி மற்றும் கோட்டயம் பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டதில் பலர் பாதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய மகாபத்ரா, கனமழை கொட்டித்தீர்த்ததற்கு மேக வெடிப்பு காரணம் இல்லை என்றார். 

அரசுப்பிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும், மேற்கில் இருந்து வீசிய பலத்த காற்றும் அதிக மழைக்கு காரணம என்றார். 

வரும் நாட்களில் மழையின் தீவிரம் குறையும் என்ற அவர், 20 மற்றும் 21ம் தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். 

கடலோர மற்றும் மலைப்பகுதிகளை அதிகம் கொண்ட கேரளாவில் மழைக்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அவர், 

நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.  

வானிலை ஆய்வு மையம் மழை தொடர்பான தகவல்களை இந்திய புவியியல் ஆய்வு மையத்திற்கு, வழங்குவதாகவும் தெரிவித்தார். 

மேலும், கேரளாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பதிவாகும் கனமழைக்கும் பருவநிலை மாற்றமே காரணம் என அவர் குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

79 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

44 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

38 views

பிற செய்திகள்

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 9 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று - ராஜஸ்தான் சுகாதாரத்துறை தகவல்

0 views

150 கி.மீ வேகம்.. டெலிவரி செய்யும் ட்ரோன் ..! இது Made in Kovai

கோவை மாவட்டம் சூலூர் அருகே, தனியார் கல்லூரி ஒன்றில், ட்ரோன்கள் மற்றும் சிறிய வகை விமானங்களை தயாரித்து மாணவர்கள் அசத்தி வருகின்றனர்.

34 views

புகார் கூற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கட்டாய கருக்கலைப்பு செய்த காவல் எஸ்.ஐ

கன்னியாகுமரி மாவட்டம் பழுகல் பகுதியில் பாலியல் பலாத்கார விவகாரத்தில் குழித்துறை நீதிமன்ற உத்தரவின் படி, காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

6 views

83 வயது ராணிக்கு கொரோனா பாதிப்பு

முன்னாள் டச்சு அரசி பியாட்ரிக்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

87 views

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்குமா ஒமிக்ரான்? | Omicron | Corona

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்குமா ஒமிக்ரான்? | Omicron | Corona

4 views

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.