உலகளாவிய பசி அட்டவணை - இந்தியாவிற்கு 101வது இடம் அளிப்பு
பதிவு : அக்டோபர் 17, 2021, 07:24 PM
உலகளாவிய பசி அட்டவணை வரிசையில் இந்தியாவை 101ஆவது இடத்திற்கு தரம் இறக்கியதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான WHH அமைப்பு உலக நாடுகளில் பசி அளவு பற்றிய அட்டவணை ஒன்றை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட 2021க்கான அட்டவணையில், இந்தியா 101 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2020இல் இந்தியா 94ஆவது இடத்தை பெற்றிருந்தது. ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய கழகத்தின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.

நான்கு கேள்விகளை கொண்ட கருத்துக் கணிப்பு ஒன்றை தொலைபேசி மூலம் நடத்தி அதன் மூலம் இந்த அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மத்திய அரசு, இது விஞ்ஞான பூர்வமான ஆய்வு முறை அல்ல என்று கூறியுள்ளது. கொரோனா தொற்றுதல்கள் ஏற்பட்ட காலங்களில், மத்திய அரசு முன்னெடுத்த மிகப் பெரிய உணவு தானிய விநியோக திட்டத்தை இந்த ஆய்வு முற்றிலும் புறந்தள்ளியதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பில், மத்திய அரசிடம் இருந்தும், இதர அமைப்புகளிடம் இருந்தும் உணவு தானிய உதவி கிடைத்தா என்று ஒரு கேள்வி கூட யாரிடமும் கேட்க்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்க தேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்புகளினால் பொது மக்களுக்கு வருமான இழப்பு, வேலை இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், அந்நாடுகளில் இந்த காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களின் விகிதம் குறைந்துள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இது எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது எனவும் மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

500 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

28 views

இரு தரப்பினர் இடையே விரோதம்... 1000 போலீசாரின் பாதுகாப்பில் நடக்கும் விளையாட்டு

சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

11 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

11 views

தங்க நகைகள் திருடு போனதாக கூறி நாடகம் - மோசடியில் ஈடுபட்ட குடும்பத்தினர்

தங்க நகைகள் திருடு போனதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 7 பேரை கர்நாடக மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

10 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

16 views

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

(24/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(24/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

15 views

ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கிய கஞ்சா கடத்தல்காரர்கள் - ஒடிசாவை சேர்ந்த மூவர் கைது

தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்திவந்தவர்களை பிடித்து டிக்கெட் பரிசோதகர் போலீசில் ஒப்படைத்தார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.