கனமழையால் நிலச்சரிவு : வீடுகள் சேதம் - 15 பேரின் உடல்கள் மீட்பு

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்கும் பணி மோப்ப நாய் உதவியுடன் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கனமழையால் நிலச்சரிவு : வீடுகள் சேதம் - 15 பேரின் உடல்கள் மீட்பு
x
கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 
சிக்கியவர்களில் இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்கும் பணி மோப்ப நாய் உதவியுடன் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொக்காயர் பகுதியின் இரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் அதில் சிக்கினர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் அடித்து செல்லப்பட்டன. அதில் ஏழு வீடுகள் நிலச்சரிவில் சிக்கியது. இந்த நிலையில் இன்று காலை முதல் தீயணைப்பு வீரர்களும், தேசிய மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கூட்டுக்கல்லில் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் 8 பேரை தேடும் பணி நடக்கிறது. பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்