கேரளாவை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்...
பதிவு : அக்டோபர் 17, 2021, 09:32 AM
கேரளாவில் பெய்யும் தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களை மழை, வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது.
அரபிக்கடல் மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் மழை வெளுத்து வாங்குகிறது.

பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கனமழை கொட்டித்தீர்த்தது. 

தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மலைகளிலிருந்து சேரும்... சகதியுமாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 

தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் பாலங்கள் மூழ்கின. பல இடங்களில் வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகள் திறக்கப்பட்டன. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணை திறக்கப்பட்ட நிலையில், கல்பாத்தி பாரதப்புழா ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல், மலங்கரா, நெய்யார், அருவிக்கரா உள்ளிட்ட அணைகளும் திறக்கப்பட்டன.

கேரள மாநிலத்தில் குறிப்பாக கோட்டயம் மாவட்டத்தை மழை, வெள்ளம் புரட்டிப்போட்டது. குடியிருப்புகள், சாலைகள் என எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. குட்டிக்கல் பகுதியில் வீடுகளையும், கடைகளையும் வெள்ளம் அடித்துச் சென்றது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 13 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பூஞ்ஞாறு பகுதியில் வெள்ள நீருக்கு மத்தியில் சிக்கிய பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் சீறிபாய்ந்தது. 

இடுக்கி மாவட்டத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றின் கரைகளில் வசிப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பல சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடுபுழா கான்யாறு பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இடுக்கியில் வரும் 23 ஆம் தேதி வரை, இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொக்காயர் பகுதியில் 4 வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அங்கு 8 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருவதால் கேரள அரசு, அதிகாரிகளுடன் ஆலோசித்து மீட்பு மற்றும் நிவாரண  நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. விமானப்படையும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. அரக்கோணத்திலிருந்து 100 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையின் 5 குழுக்கள் கேரளாவுக்கு விரைந்துள்ளன.  

தொடர்புடைய செய்திகள்

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

60 views

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

30 views

"என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செஞ்சுக்கோங்க..!!" - நடிகர் ஜெயராம் வேண்டுகோள்

பிரபல மலையாள நடிகர் ஜெயராம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

13 views

பிற செய்திகள்

புல்லட்டை திருடிச் சென்ற காதல் ஜோடி - மற்றொரு ஜோடியை நிறுத்தி வைத்து விட்டு அபேஸ்

சேலத்தில் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக கொடுத்து விட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புல்லட்டை திருடிச் சென்ற காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

6 views

'மாறன்' படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள "மாறன்" படத்தில் இருந்து, முதல் பாடலின் வீடியோ வரும் 26ஆம் தேதி வெளியாகிறது

4 views

"கிறிஸ்துவ பள்ளிகளில் மதமாற்றம் செய்வதில்லை" - கார்த்தி சிதம்பரம் (நாடாளுமன்ற உறுப்பினர்)

கிறிஸ்துவ பள்ளிகளில் கட்டாய மதமாற்றம் செய்வதில்லையென தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், தஞ்சை மாணவி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

6 views

தொழிலதிபர் தன்ராஜ் கோச்சாரின் சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் தன்ராஜ் கோச்சார் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 69 கோடியே14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.

13 views

தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது

8 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.