" சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும், பல்வேறு சவால்கள் உள்ளன" - சோனியாகாந்தி

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதன் அடையாளம் தான், பல ஆண்டுகளாக சேமித்த இந்திய சொத்துக்களை விற்கும் மத்திய அரசின் முடிவு என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
 சட்டமன்ற தேர்தலுக்கு  தயாராக வேண்டும், பல்வேறு சவால்கள் உள்ளன - சோனியாகாந்தி
x
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசிய  சோனியாகாந்தி,

கட்சி தலைமையிடம் ஊடகங்கள் வாயிலாக பேச வேண்டாம் என்றும், எதுவாக இருந்தாலும்  நேர்மையான, வெளிப்படையான விவாதத்திற்கு தயாராக இருப்போம் என்றும்  தெரிவித்தார்

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதன் அடையாளம் தான், பல ஆண்டுகளாக சேமித்த இந்திய சொத்துக்களை விற்கும் மத்திய அரசின் முடிவு என சோனியா காந்தி குறிப்பிட்டார்.

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்த அவர், சமையல் எண்ணெய் விலையும் அதிகரித்திருப்பது சாமானிய மக்களை பாதிப்படைய வைத்துள்ளதாக கூறினார். 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும் என கேட்டுக்கொண்ட சோனியா காந்தி, இதற்காக பல்வேறு சவால்கள்  இருப்பதாக குறிப்பிட்டார்.

ஒற்றுமையுடனும், பலத்தோடும் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு பணியாற்றினால் மிகச் சிறப்பான முறையில்  தேர்தலை எதிர்கொள்ள முடியும் என சோனியா காந்தி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்