ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐப்பன் கோவில் நடை திறப்பு

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐப்பன் கோவில் நடை திறப்பு
x
கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் ஐப்பசி மாதம் பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் ஐந்து நாட்கள் நடைபெறும்  பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி என கூறப்பட்டுள்ளது. புதிய மேல்சாந்தி தேர்வு, நாளை காலை குலுக்கல் முறையில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் இணையத்தில் முன்பதிவு செய்ததன் அடிப்படையில் அனுமதிக்கப்பட உள்ளனர். ஐயப்பன் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள் தரிசனத்திற்கு பிறகு வரும் 21ம் தேதி நடை சாத்தப்பட உள்ளது.   மண்டல மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்