11 ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே மோதல் - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

கேரளாவில் நேற்று நடைபெற்ற இறுதி நாள் பொதுத்தேர்வில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
11 ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே மோதல் - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
x
கோழிக்கோடு அருகே கொடுவள்ளி பகுதியில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத சென்றுள்ளனர். அப்போது மாணவர்களில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த இளைஞர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், அப்பகுதி மக்களின் தலையீட்டால் மாணவர்கள் தாக்குதலை நிறுத்தி கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக யாரும் புகார் அளிக்காத நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்