சீனாவின் கருத்துக்கு இந்தியா கண்டனம்

அருணாச்சல் பிரதேசம், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் அன்னியபடுத்த முடியாத பகுதி என, சீனாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.
சீனாவின் கருத்துக்கு இந்தியா கண்டனம்
x
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு கடந்த வாரம் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட நிலையில், சீனா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் அன்னிய படுத்த முடியாத பகுதி என தெரிவித்துள்ளார். அவர் மற்ற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்வதை போல அருணாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான இரு தரப்பு ஒப்பந்தங்களை மீறியுள்ள  தற்போதைய சூழ்நிலையை விரைந்து தீர்க்க சீனா பணியாற்ற வேண்டுமென இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். தேவையற்ற விவகாரங்களை தொடர்பு படுத்தாமல் இரு தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை சீனா கடைபிடிக்க வேண்டும் எனவும் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்