"சிஏஏ மசோதாவை எதிர்த்த போராட்டம்; குற்றமற்ற வழக்குகள் வாபஸ் பெறப்படும்" - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

சபரிமலையில் பெண்கள் நுழைவதை எதிர்த்து நடந்த போராட்டம் மற்றும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து கேரளாவில் நடந்த போராட்டத்தில், பதிவு செய்யப்பட்ட வழக்கில், குற்றமற்ற வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று, முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
சிஏஏ மசோதாவை எதிர்த்த போராட்டம்; குற்றமற்ற வழக்குகள் வாபஸ் பெறப்படும் - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
x
சபரிமலையில்  பெண்கள் நுழைவதை எதிர்த்து நடந்த போராட்டம் மற்றும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து கேரளாவில் நடந்த போராட்டத்தில், பதிவு செய்யப்பட்ட வழக்கில், குற்றமற்ற வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று, முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.  சபரிமலை போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட  வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் பினராயி விஜயன், வழக்குகளின் தற்போதைய நிலை மற்றும் குற்றவியல் தன்மையை ஆராய குற்றப்பிரிவு ஐஜி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்