மனித உரிமை என்ற பெயரில் "நாட்டின் பெயரை களங்கப்படுத்த முயற்சி" - மக்கள் பாதுகாப்பாக இருக்க மோடி அறிவுரை

மனித உரிமை என்ற பெயரில் சிலர் நாட்டின் பெயரை களங்கப்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மனித உரிமை என்ற பெயரில் நாட்டின் பெயரை களங்கப்படுத்த முயற்சி - மக்கள் பாதுகாப்பாக இருக்க மோடி அறிவுரை
x
மனித உரிமை என்ற பெயரில் சிலர் நாட்டின் பெயரை களங்கப்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டதின் 28 வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய அவர், உலகபோரின்போது வன்முறைகள் சூழந்திருந்த நேரத்தில் அகிம்சை பாதையை உலகிற்கு இந்தியா காட்டியதாக கூறினார். தற்பொழுது, சிலர் சொந்த நலனிற்காக மனித உரிமைகள் மீறல் என்ற பெயரில் நாட்டின் புகழை கெடுக்க முயற்சிப்பதாக கூறியதுடன், அவர்களிடம் பாதுகாப்புடன் இருக்கும்படி தெரிவித்தார். அரசியல் ஆதாயத்துடன் மனித உரிமை மீறல்களை கையிலெடுப்பதால் ஜனநாயகத்திற்கு  அச்சுறுத்தல் ஏற்படும் என்று மறைமுகமாக எதிர்கட்சியினரை சாடினார். மேலும் முத்தலாக் சட்டம் மற்றும் பெண்களுக்கான மத்திய அரசின் உரிமைகளை எடுத்துரைத்தும் பிரதமர் மோடி பேசினார். 


Next Story

மேலும் செய்திகள்