கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மின்சாரம் விற்பனை - மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மின்சாரம் விற்பனை - மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
x
கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது. 

நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கேரளா, மும்பை, பஞ்சாப், ஜார்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்விநியோகம் குறித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், நுகர்வோருக்கு மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டியது மின் விநியோக நிறுவனங்களின் பொறுப்பு என்றும், 24 மணி நேரமும் மின்சாரம் பெற உரிமை பெற்ற நுகர்வோருக்கு மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பல மாநிலங்கள் நுகர்வோருக்கு வழங்காமல் சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.  

எந்த ஒரு மாநிலமாவது நுகர்வோர்களுக்கு வழங்காமல் வெளிச்சந்தையில் மின்சாரத்தை கூடுதல் விலைக்கு விற்பது கண்டறியப்பட்டால், மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் திரும்ப பெறப்பட்டு தேவையுள்ள மாநிலங்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

மின்சார ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் 15 சதவீத மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்படுவதால், தட்டுப்பாடு உள்ள மாநிலங்கள் அதனை பயன்படுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்