பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியம் - தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி விடுவிக்கப்பட்டது

மத்திய அரசு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்திற்கு 183.67 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.
பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியம் - தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி விடுவிக்கப்பட்டது
x
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவின துறை தமிழகம் உட்பட 17 மாநிலங்களுக்கு பகிர்விற்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தின் ஏழாவது தவணையாக 9ஆயிரத்து 
871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. இதில் தமிழகத்தின் பங்காக 183.67 கோடி ரூபாய்  விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை மொத்தம் 69 ஆயிரத்து 97 கோடி ரூபாயை மத்திய அரசு மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது. இதே போல்  தமிழகத்திற்கு நடப்பு நிதியாண்டில் இதுவரை ஆயிரத்து 285.67 கோடி  ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 15வது நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பகிர்விற்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியம் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு 1 லட்சத்து 18 ஆயிரத்து 452 கோடி ரூபாய் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்