சபரிமலை நடைமுறை குறித்த செப்பு ஓலை - செப்புஓலை தன்னிடம் உள்ளது என்ற மோன்சன்

கேரள சபரிமலை வழிபாடு குறித்து செப்பு ஓலை எனக் கூறப்படும் ஆவணம் போலியானது என அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கியுள்ளார்.
சபரிமலை நடைமுறை குறித்த செப்பு ஓலை - செப்புஓலை தன்னிடம் உள்ளது என்ற மோன்சன்
x
கேரளாவைச் சேர்ந்த சிறையில் இருக்கும் மோசடி மன்னன் மோன்சன், உலகின் பல்வேறு தொல்பொருட்கள் தன்னிடம் உள்ளதாக கூறி விற்று வந்துள்ளார். ஓலைச் சுவடி, செப்பு தகடுகள், நாணயம், சிலை உள்ளிட்ட ஏராளமானவற்றை அவர் வைத்துள்ளார். அண்மையில், சபரிமலையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆவணம் தன்னிடம் உள்ளதாக மோன்சன் கூறியிருந்தார். அவரிடம், அந்த ஆவணம் இருப்பது ஆபத்தானது என எதிர்க் கட்சிகள், கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், கேரள சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், மோன்சன் வைத்திருப்பது போலியானது என விளக்கினர். இதனிடையே, மோன்சனை முன்னாள் டி.ஜி.பி. சந்தித்தது குறித்து தமக்கு தெரியாது என்றும் அவர் விளக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்