இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு - பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்

நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதால் பல்வேறு மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு - பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்
x
இந்தியாவில் நிலக்கரி மூலம் பெருமளவு மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில், சீனா, லெபனானை போன்று தற்போது இந்தியாவிலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பருவமழை, மின் நுகர்வு பன்மடங்கு அதிகரிப்பு போன்ற காரணங்களால் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 99 அனல் மின் நிலையங்களில் மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி உட்பட பல மாநிலங்களில் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் 2 மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 4 நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதாக அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்