லக்கிம்பூர் வன்முறை விவகாரம் - உ.பி அரசைக் கண்டித்த நீதிமன்றம்

லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் உத்தரப் பிரதேச அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
லக்கிம்பூர் வன்முறை விவகாரம் - உ.பி அரசைக் கண்டித்த நீதிமன்றம்
x
லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் உத்தரப் பிரதேச அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் கடந்த 3ஆம் தேதி 4 விவசாயிகள் உட்பட 8 பேர் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
உத்தரப் பிரதேச அரசுத் தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜரானார்.

விசாரணையின் போது வாதாடிய ஹரீஷ் சால்வே, விவசாயிகளின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததற்கான ஆதாரம் உடற்கூறு ஆய்வில் இல்லை என்று தெரிவித்தார். மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆஷிஸ் மிஸ்ரா நீதிமன்றத்தில் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது.

தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ஏராளமான மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த தலைமை நீதிபதி, கொலை வழக்கை இப்படியா கையாள்வது என்று மாநில அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், உத்தரப் பிரதேச அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன், அரசு சார்பில் சிபிஐ விசாரணைக்கு கோரப்பட்டுள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அரசுத் தரப்பில் இல்லை என்று பதிலளிக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை தீர்வாகாது என்று தெரிவித்த நீதிபதிகள், லக்கிம்பூர் வன்முறை தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்ததுடன், வழக்கு விசாரணையை அக்டோபர் 20ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்