இந்தியாவின் டாப்-10 கோடீஸ்வரர்கள் பட்டியல் - முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
x
இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் தொடர்ந்து 14வது ஆண்டாக தொழில் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் 2-வது இடத்தை பிடித்திருக்கும் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 5 லட்சத்து 59 ஆயிரத்து 648 கோடி ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்திருக்கும் எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 2 லட்சத்து 31 ஆயிரத்து 939 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் 4-ஆவது இடத்தை பிடித்திருக்கும் தொழிலதிபர் ராதாகிஷ்ணா தாமனியின் சொத்து மதிப்பு 2 லட்சத்து 19 ஆயிரத்து 963 கோடி ரூபாய் என்றும்

5 ஆவது இடத்தை பிடித்திருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் சேர்மன் சைரஸ் பூனவாலாவின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 145 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த இடங்களை பிடித்திருக்கும் தொழில் அதிபர்கள் லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 634 கோடி ரூபாய் என்றும், 

சாவித்திரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 635 கோடி ரூபாய் என்றும் 

கோடாக் மஹிந்திரா வங்கி இயக்குநர் உதய் கோட்டாக்கின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 415 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியலில்கட்டுமான தொழிலில் கொடிகட்டிப்பறக்கும் பலோன்ஜி மிஸ்திரி 9-ஆவது இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 696 கோடி ரூபாய் என்றும்

பிர்லா குழும நிறுவனங்களின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 243 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்