ஆந்திராவில் 110 ரூபாயை எட்டியது பெட்ரோல் விலை

ஆந்திர மாநிலம் திருப்பதியில் பெட்ரோல் விலை 110ரூபாயை தாண்டியது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஆந்திராவில் 110 ரூபாயை எட்டியது பெட்ரோல் விலை
x
ஆந்திர மாநிலம் திருப்பதியில் பெட்ரோல் விலை 110ரூபாயை தாண்டியது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை காரணமாக ஆந்திர மாநிலத்தில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 110 ரூபாய் 4 பைசாவாக உள்ளது. அதேபோல் டீசல் விலை 102 ரூபாய் 2 பைசாவாக உள்ளது. ஆந்திர மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டபோது மாநிலத்தின் வளர்ச்சிக்காக பெட்ரோல் மீது ஐந்து ரூபாயும், டீசல் மீது மூன்று ரூபாய்க்கும் விலை ஏற்றியது. இதன் காரணமாக தற்போது அண்டை மாநிலங்களான தமிழகத்தை விட ஒன்பது ரூபாயும், கர்நாடக மாநிலத்தை விட ஆறு ரூபாயும் விலை அதிகமாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்