குரூப் சி, டி ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் போனஸ் - மத்திய அமைச்சரவை

ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குரூப் சி, டி ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் போனஸ் - மத்திய அமைச்சரவை
x
ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வேயில் பணியாற்றும் குரூப் சி மற்றும் குரூப் டி பணியாளர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே பணியாளர்களுக்கு உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் இந்த ஆண்டு ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ரயில்வேயில் பணியாற்றும் 11 லட்சத்து 56 ஆயிரம் கெஸ்ட் அல்லாத பணியாளர்கள் பயன் பெறுவர். இதன் காரணமாக மத்திய அரசுக்கு கூடுதலாக ஆயிரத்து 985 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்