இந்தியா வரும் ரஷ்யாவின் எஸ். 400 ஏவுகணைகள் - எதிரிநாட்டு ஏவுகணைகளை வானிலே இடைமறித்து சுட்டு வீழ்த்தும்

இந்தியாவிற்குள் அத்துமீறி வரும் எதிரிநாட்டு விமானப்படை விமானங்களையும், ஏவுகணைகளையும் வானிலே இடைமறித்து சுட்டு வீழ்த்தும் எஸ். 400 நவீன ஏவுகணை விரைவில் இந்தியா வரவிருக்கிறது.
இந்தியா வரும் ரஷ்யாவின் எஸ். 400 ஏவுகணைகள் - எதிரிநாட்டு ஏவுகணைகளை வானிலே இடைமறித்து சுட்டு வீழ்த்தும்
x
இந்தியாவிற்குள் அத்துமீறி வரும் எதிரிநாட்டு விமானப்படை விமானங்களையும், ஏவுகணைகளையும் வானிலே இடைமறித்து சுட்டு வீழ்த்தும் எஸ். 400 நவீன ஏவுகணை விரைவில் இந்தியா வரவிருக்கிறது.


எல்லையில் சீனா, பாகிஸ்தான் என இருபுற பாதுகாப்பு சவால்களை சமாளிக்கும் வகையில்   பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தும் மத்திய அரசு, முப்படைகளையும் நவீனப்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக விமானப்படையை மேலும் வலுசேர்க்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து எஸ். 400 ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.

அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கைக்கு மத்தியிலும், திட்டமிட்டப்படி எஸ்-400 ஏவுகணையை வாங்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்தது.

ரஷ்யாவும் இந்தியாவுக்கான எஸ் -400 ஏவுகணைகளை தயாரிக்கும் பணிகள் தீவிரபடுத்தியதுடன்,  2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தது.
 
இந்நிலையில் விமானப்படையின் புதிய தளபதியாக பதவியேற்றிக்கும் வி.ஆர். சவுத்ரி, இவ்வருட இறுதிக்குள் எஸ்.400 ஏவுகணைகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.  

புதிய ஆயுதங்கள், எல்லையில் படைகளின் தயார் நிலை குறித்து பேசிய அவர், இருதரப்பு எச்சரிக்கையை எதிர்க்கொள்ள இந்திய படைகள் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

எஸ். 400 ஏவுகணைகள் ஒரு வான் பாதுகாப்பு கட்டமைப்பாகும்.

அதிலிருக்கும் ரேடார் கட்டமைப்பு 400 கிலோ மீட்டர் சுற்றளவிலிருக்கும் பகுதிகளை கண்காணிக்கும்.

அதற்குள் வரும் ஏவுகணைகள், விமானங்கள், ட்ரோன்கள் குறித்து எச்சரிக்கை சமிக்ஞையை அனுப்பும்.

பின்னர் கட்டளையை பெற்றதும் எதிரி நாட்டு விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி அழித்துவிடும்.

இவ்வாறு ஒரே நேரத்தில் 80 இலக்குகள் மீது பதிலடி ஏவுகணைகளை வீசி தகர்க்கவல்லது. ரஷ்யாவிடம் இருந்து விரைவில் இந்தியா வரவிருக்கும் எஸ். 400 ஏவுகணைகள் இந்திய விமானப்படைக்கு மேலும் வலுசேர்க்கும் என பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்