"மருத்துவ கல்வி வணிகமாகிவிட்டது" - உச்சநீதிமன்றம்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு பாடத்திட்டத்தை ஏன் அவசர கதியில் மாற்ற வேண்டும்? என தேசிய தேர்வு வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவ கல்வி வணிகமாகிவிட்டது - உச்சநீதிமன்றம்
x
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு பாடத்திட்டத்தை ஏன் அவசர கதியில் மாற்ற வேண்டும்? என தேசிய தேர்வு வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படை மாற்றப்பட்டுள்ளது என்றும் இதனால் தேர்வு எழுதும் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அப்போது மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தன்னிச்சையாகவும், அவசர கதியிலும், சட்டத்தை மீறும் வகையிலும் அது மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. பொதுநலன் கருதியே, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அப்போது மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை ஏன் அவசர கதியில் மாற்ற வேண்டும்?  எனவும், அதிகாரம் உள்ளது என்பதற்காக மாற்றினீர்களா? என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான 500 இடங்களை நடப்பாண்டு நிரப்பாவிட்டால் வானம் இடிந்து விழுவா போகிறது? என்றும் அவசர கதியிலான நடவடிக்கை மருத்துவ கல்விக்கு நல்லதல்ல எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

மருத்துவக் கல்வி வணிகமாகிவிட்டது போல, மருத்துவ கல்வியை முறைப்படுத்துதலும் வணிகமாகிவிட்டதாாக எண்ண தோன்றுகிறது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்