சானிடைசர்,கிருமிநாசினி விற்பனை சரிவு

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதால், சானிடைசர் மற்றும் மல்டி விட்டமின் மாத்திரைகள் விற்பனை குறைந்துள்ளது.
சானிடைசர்,கிருமிநாசினி விற்பனை சரிவு
x
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதால், சானிடைசர் மற்றும் மல்டி விட்டமின் மாத்திரைகள் விற்பனை குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதுடன் தொற்று எண்ணிக்கையும் நாளுக்கு நாள் சரிவடைந்து வருகிறது.

இதனால், மே மாதம் உச்சத்தில் இருந்த சானிடைசர் மற்றும் மல்டிவிட்டமின் மாத்திரைகள் விற்பனை தற்போது பெருமளவில் சரிந்துள்ளது.

மே மாதம் 77.5 கோடியாக இருந்த சானிடைசர்களின் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 40 சதவீதம் சரிவடைந்து  47 கோடியாக உள்ளது என  அகில இந்திய மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்தியர்கள் விட்டமின் சி உள்ளிட்ட மல்டி விட்டமின் மாத்திரைகளை பெருமளவில் வாங்கியதால் 2019 ஐ காட்டிலும் கடந்த ஆண்டு அதன் விற்பனை100 சதவீதம் ஏற்றம் கண்டது.

இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்து வருவதால் மல்டி விட்டமின் மாத்திரைகளின் விற்பனை 5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு ஊசி செலுத்தப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருவது, இரண்டாவது அலையின் தாக்கம் சரிவு போன்ற காரணங்களால் கிருமிநாசினிகள் விற்பனையும் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்