"விமானம் தரையிறங்க அனுமதிக்க வேண்டும்" - உத்தரபிரதேச அரசுக்கு பஞ்சாப் கடிதம்
வன்முறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க பஞ்சாப் முதலமைச்சர் விரும்புவதால் அவர் வரும் விமானம் தரையிறங்க அனுமதியளிக்குமாறு உத்திரபிரதேச அரசுக்கு பஞ்சாப் விமான போக்குவரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
லகிம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அண்மையில் பஞ்சாப்பின் முதலமைச்சராக பதவி ஏற்ற சன்னி திட்டமிட்டிருந்தார். எனினும் பாதுகாப்பு காரணமாக வெளிமாநில முதலமைச்சர் வருகைக்கு தடைவிதித்து உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் சன்னி வருவதற்கு அனுமதிக்குமாறு பஞ்சாப் விமான போக்குவரத்துறை இயக்குனர் சார்பில் உத்திரபிரதேச மாநில கூடுதல் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
Next Story

